ரணிலின் சவாலுக்கு மஹிந்தவும் பதில் சவால்

259 0

அர்ஜூன் மஹேந்திரனை நாட்டுக்கு அழைத்து வந்த அடுத்த கனம், நான் பாராளுமன்றத்தில் நிவ்யோர்க் டைம்ஸ் செய்தி தொடர்பில் அறிவிப்புச் செய்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நிவ்யோர்க் டைம்ஸ் செய்தி குறித்து தன்னை பாராளுமன்றத்தில் அறிவிப்புச் செய்யச் சொல்வதற்கு முன்னர் பிரதான சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை நாட்டுக்கு அழைத்து வந்து காட்டுமாறும் அவர் கூறினார்.

ஹம்பாந்தோட்டயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த 3 வருடங்கள் சென்றும் இதற்கான எந்த ஒழுங்கு நடவடிக்கையும் இல்லையெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகை தொடர்பில் முடியுமானால் அறிவிப்பொன்றை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை (06) விடுத்திருந்த சவால் குறித்து வினவியதற்கே இவ்வாறு தெரிவித்தார்.

Leave a comment