ஜப்பான் – மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு

295 0

ஜப்பான் நாட்டில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.

ஜப்பான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கின்றன.
தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
வெள்ளத்தில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் பலியானோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. மேலும், காணாமல் போன 20க்கு மேற்பட்டோரை தேடும் பணிகளில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a comment