முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, 2015 ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்கு பணம் வழங்கப்பட்டதாக, அமெரிக்காவின் நியுயோர்க் டைம்ஸ் நாளிதல் வெளியிட்டுள்ள அறிக்கை பொய்யானதென, சீன துறைமுக மற்றும் பொறியியல் நிறுவனம் (CHEC) தெரிவித்துள்ளது.
இவ்வாறு வெ ளியிடப்பட்டிருக்கும் அறிக்கையானது திரிபுபடுத்தப்பட்ட ஒன்றாகும் என, அதன் முகாமைத்துவ பணிப்பாளர் ஹென் ஷின் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம், சீனா மற்றும் இலங்கைக்கு இடையிலான பரஸ்பரம் காரணமான மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களுடன் தாம் தலையிட போவதில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.