முன்னாள் கடற்படைத் தளபதி ஜயனாத் கொலம்பகேவிடம் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.
டி.ஏ. ராஜபக்ச ஞாபகார்த்த அருங்காட்சியகம் அமைப்பதற்கு 200 கடற்படை வீரர்களை ஈடுபடுத்தல் மற்றும் 295 இலட்சம் ரூபா அரசாங்கப் பணத்தை துஸ்பிரயோகம் செய்தமை ஆகியன குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
வீரகெட்டிய பிரதேசத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிர்மாண பணிகளுக்கான ஊழிய வளம் கடற்படையினால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் அண்டு பெப்ரவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 200 கடற்படைவீரர்கள் நிர்மாணப் பணிகளுக்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட படையினருக்கு, கடற்படை சம்பளம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.