திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரிவில் அதிகளவிலான மக்களின் காணிகளை வன இலாகாவினர் எல்லைக்கல் போட்டு வன இலாகாவிற்கு சொந்தமாக கைப்பற்றியமைக்கு எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் எதிர்க்கட்சித்தலைவர் இராசம்பந்தன், உள்நாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகுரூப் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, இங்கு காணி சம்பந்தமாக பேசுகையில் குறுக்கிட்ட எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தனது கடுமையான ஆட்சேபனையை வெளியிட்டார்.