மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும் அதிகாரம் இல்லை என்றால் ஆராய்ச்சி மாணவர்களின் நிலை!

14414 0

பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு பதிலாக அமையக்கூடிய உயர்கல்வி ஆணையத்திடம் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் ஆராய்ச்சி மாணவர்களுடைய நிலை என்பது கேள்விக்குறியாக அமைந்துவிடும் என்று சட்டசபையில் மு.கஸ்டாலின் பேசினார்.

பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு பதிலாக அமையக்கூடிய உயர்கல்வி ஆணையத்திடம் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் ஆராய்ச்சி மாணவர்களுடைய நிலை என்பது கேள்விக்குறியாக அமைந்துவிடும் என்று சட்டசபையில் மு.கஸ்டாலின் பேசினார்.
சட்டசபையில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பல்கலைக்கழக மானியக்குழு தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்:-பல்கலைக்கழக மானியக் குழுவை (யு.ஜி.சி) ஒழித்துவிட்டு, உயர் கல்வி ஆணையம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த ஆணையம் என்பது மாநில உரிமைகளுக்கும், மாநிலத்தில் இருக்கக்கூடிய பல்கலைக் கழகத்திற்கும் எந்த அளவிற்கு உதவிகரமாக இருக்கப்போகிறது? என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
உயர் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டிலும் பா.ஜ.க.வினுடைய அரசியல் புகுந்து விளையாடுவதற்கான கதவுகள் திறக்கப்படுகின்றதோ என்ற சந்தேகம் உயர்கல்வி தொடர்பான அனைத்து முனைகளிலும் இப்போது முளைத்திருக்கிறது. தமிழ்நாட்டிலே 13 பல்கலைக்கழகங்கள் இருக்கிறது. பல்கலைக்கழக மானியக்குழு நிதி உதவியிலே பல்வேறு சிறப்பு திட்டங்களால் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அவற்றிற்கெல்லாம் இனி நிதி எப்படி கிடைக்கப்போகிறது?.
பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு பதிலாக அமையக்கூடிய உயர்கல்வி ஆணையத்திடம் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டால், பல்கலைக்கழக மானியக்குழு உதவியோடு நடைபெறக்கூடிய கல்வி திட்டங்கள், கிடைக்கப்பெறும் மானியங்கள், ஆராய்ச்சி மாணவர்களுடைய நிலை என்பது கேள்விக்குறியாக அமைந்துவிடும். உயர்கல்வியில் 50 சதவீதத்திற்கு மேல் பங்களிப்பை செலுத்தி வரக்கூடிய மாநில அரசுகளின் கருத்துகளை உயர்கல்வி ஆணையம் அமைப்பதில் மத்திய அரசு கேட்டதா?. அப்படி இதுவரை கேட்கவில்லை என்று சொன்னால், மாநில அரசின் கருத்தை கேட்டபிறகு தான் உயர்கல்வி ஆணையத்தை அமைத்திருக்க வேண்டும்.
உரிமையை காப்போம்
அமைச்சர் அன்பழகன்:-மத்திய மனித வளத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் உயர் கல்வி ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை கொண்டு வந்திருக்கிறார். மாநிலங்கள் சார்பில் 7-ந்தேதிக்குள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்கள். தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர் அதிகாரிகள், கல்வியாளர்களின் ஆலோசனைகளை பெற்று இருக்கிறோம். எக்காரணத்தை கொண்டும் தமிழகத்தின் கல்வி உரிமையை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். தமிழகத்தின் உரிமைகள் பறிபோகாத வகையில் தமிழக அரசு செயல்படும். நமது தேவைகளை நாம் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
துரைமுருகன்:-பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்து விட்டு உயர் கல்வி ஆணையம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?.
அமைச்சர் அன்பழகன்:-மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. கல்வி வளர்ச்சிக்காக இந்த முடிவை அவர்கள் எடுத்திருப்பார்கள். எங்களை பொறுத்தவரையில் தமிழகத்தின் கல்வியை உரிமை தொடர்ந்து காப்போம்.

Leave a comment