மாதம்பை, பழைய நகர் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து இன்று (04) பகல் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாதம்பை, பழைய நகர் பகுதியை சேர்ந்த 67 வயதுடைய மொஹமட் ஜலால்தீன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நீரில் மூழ்கியதில் குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அவசர மரண பரிசோதனை அந்த இடத்திலேயே இடம்பெற்றதுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.
பல சந்தர்ப்பங்களில் குறித்த நபர் தற்கொலை செய்து கொள்வதாக வீட்டாருக்கு தெரிவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.