மாணிக்க கற்களுடன் சீன நாட்டு பெண் கைது

467 0

சட்டவிரோதமான முறையில் மாணிக்க கற்களை எடுத்து வந்த சீன நாட்டு பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.குறித்த 35 வயதுடைய சீனப்பெண் இலங்கையர் ஒருவரை திருமணம் செய்து 12 வருடமாக நீர்கொழும்பு பகுதியில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் நேற்று (03) இரவு 11.30 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 407 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.

இந்நிலையில் பயணிகள் வருகை தரும் ஒழுங்கின் ஊடாக குறித்த நபர் வருகை தரும்போதே அவருடைய பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த மாணிக்க கற்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபரிடம் இருந்து பெரிய மாணிக்க கற்கள் 18 உம் சிறிய மாணிக்க கற்கள் பலவும் 13 பொதிகளில் இருந்த நிலையில் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மாணிக்க கற்கள் 48,64,777 ரூபா பெறுமதியுடையவை என சுங்க ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

இது தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு மாணிக்க கற்களை அரசுடமை ஆக்கியதுடன் சந்தேக நபருக்கு 40,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a comment