கர்நாடக அரசை கண்டித்து சென்னையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், கர்நாடகத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு சுயநலமான அரசியல்வாதிகளே காரணம்.
உச்சநீதிமன்றம் சொல்லியும் சட்ட ஒழுங்கை காப்பாற்ற கர்நாடக அரசு தவறி விட்டது. இதனால் உடனடியாக கர்நாடக அரசு பதவி விலக வேண்டும்.
இந்த போராட்டத்தால் இரு மாநில மக்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாநிலங்களுக்கும் நன்கு அறிந்த ரஜினிகாந்த் போன்ற திரையுலகத்தினர் பேச வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக போராடி வெற்றி பெற்ற தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.
இருமாநில முதல்வர்களும் சந்தித்துப் பேச வேண்டும். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
மத்திய அரசில் இருந்து ஏதேனும் ஒரு குழு கர்நாடகாவில் உள்ள அணைகளை பார்வையிட்டால் தண்ணீர் இருப்பது தெரிந்துவிடும் என்பதால்தான், நேற்று வரை கர்நாடக மாநில மக்களுக்கு குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை என்று சொல்லி வந்த அம்மாநில முதல்வர் சித்தராமையா 2017ம் ஆண்டு ஜனவரி வரை தங்களுக்கு தண்ணீர் இருப்பதாக கூறுகிறார்.
இதனிடையே, பாஜக ஒருபோதும் பிரிவினையை ஆதரிக்காது எனவும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.