எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் இருவரும் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பு பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் ஊக்குவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த இரா.சம்பந்தன், புதிய அரசியலமைப்பு குறித்து கந்துரையாடியிருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தன், மஹிந்த ராஜபக்ஷவை விரைவில் சந்தித்து உத்தியோகபூர்வ கலந்துரையாடலை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்