தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணனின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்புரிமையை நீக்கக் கோரி நேற்று முன்தினம் கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தெரிவத்தாட்சி அலுவலகர் உள்பட்டோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் நிரந்தரமாக வதியாத ஒருவர் உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டமை உள்ளூராட்சி தேர்தல் விதியை மீறும் செயல் என மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணனின் முகவரியை தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாக அறிவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன என்ற தகவல்கள் வெளியாகி இருந்தன.