காவிரியில் தண்ணீர் திறந்துவிடக கோரியும் கர்நாடகத்தில் நடக்கும் வன்முறையை கண்டித்தும் நாளை முழுஅடைப்பு போராட்டம் நடத்த போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகளுக்கு விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்து இருந்தன.
இதை ஏற்று நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 16ஆம் திகதி நடைபெறும் போராட்டத்தில் தி.மு.க.வினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முழு அடைப்பு போராட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.