ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளுக்கு அடிப்பணிந்தே 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளரானார் என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை வீழ்த்த பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமையினால் தான் ஆட்சி பீடமேற சம்மதித்தேன் எனவும் கட்சியில் பாரிய பிளவுகள் ஏற்படுவதை தவிர்த்தேன் என ஜனாதிபதி கூறுவதில் எவ்வித உண்மையுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
2020ஆம் ஆண்டுக்குள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஆட்சியை ஏற்படுத்துவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது வேடிக்கையாகவுள்ளது.
எமது கட்சியை பிளவுப்படுத்தும் நோக்கிலேயே அவர் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிருந்தார் எனவும் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.