இந்தியா பாம்பன் அருகே குந்துகால் கடற்கரை கிராமத்தில் இறந்த நிலையில் இராட்சத புள்ளிசுறா ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
கரையொதுங்கிய இராட்சத புள்ளி சுறா சுமார் 1500 கிலோ எடையும், 17 அடி நீளமும் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுறாவைக் கண்ணுற்ற கிராம மக்கள், வனத்துறையினருக்குத் தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள், இறந்த நிலையில் கரை ஒதுங்கிய புள்ளிசுறாவை உடல்கூற்றுப் பரிசோதனை செய்து மணலில் புதைத்தனர்.
உலகிலேயே மிக அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் வசிக்கும் பகுதி மன்னார் வளைகுடா கடற்பகுதியாகும்.
இந்நிலையில் குந்துகால் கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய அரியவகை புள்ளிசுறா, மன்னார் வளைகுடா கடற்பிராந்தியத்திலிருந்து பாம்பன் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த புள்ளிசுறா நோய் வாய்ப்பட்டு அல்லது பெரிய அளவிளான சரக்கு கப்பலின் எஞ்சினில் அடிபட்டு இறந்திருக்கலாம் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.