வருடாந்தம் 50 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான வருவாயை ஈட்டும், தொகை மற்றும் சில்லறை வியாபாரிகளிடம் இருந்து வரி அறவிடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்திகளுக்கும் 15 சதவிகித வரி அறவிடப்படவுள்ளதாக இதன்போது அறிவிக்கப்பட்டது.
அத்துடன் சீனி அல்லது வேறு இனிப்பு சார் உள்ளீடுகள் சேர்க்கப்பட்ட பால் மாவிற்கும் இந்த வரி அறவிடப்படவுள்ளது.
அதேவேளை வானூர்திப் பயணச் சீட்டுகளுக்கும் இந்த வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் சுகாதார சேவைகளுக்கும் இந்த வரி அறவிடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.