அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரிவித்து தகுதியற்ற 1000 பேருக்கு கல்வித் துறையில் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 4 ஆம் திகதி நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கல்வித் துறை சங்கங்கள் அறிவித்துள்ளன.
ஆசிரியர், அதிபர், கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் ஆகியோரின் சங்கங்கள் இணைந்து எதிர்வரும் 4 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானம் எடுத்துள்ளனர்.
இந்த பதவி உயர்வை அரச சேவைகள் ஆணைக்குழுவும் அனுமதித்துள்ளது. இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளவர்களில் 230 பேர் கல்வி நிருவாக சேவைக்கு பதவி உயர்வு பெறுவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்கள் அதிபர் சேவைக்கு பதவியுயர்வு பெறுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.