விமல் வீரசங்சவிடம் விசாரணை

330 0

wimal-verawnsaதேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, காவற்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று வாக்கு மூலம் அளித்தார்.

விமல் வீரவங்சவிடம் இதன் போது, சுமார் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக, நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கடந்த அராசங்கத்தில், வீடமைப்பு பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக, அவர் பதவி வகித்த காலப்பகுதியில், அரசாங்க வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பிலேயே விமல் வீரவங்சவிடம் இன்றைய தினம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதனிடையே, கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தயின் சகோதரரான சானுக ரத்வத்த உள்ளிட்ட ஐந்து பேர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பங்கு சந்தையின் நிதி மோசடி தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக சானுக ரத்வத்த உள்ளிட்ட ஐந்து பேர் காவற்துறை நிதி மோசடி தவிர்ப்பு பிரிவில் இன்று முற்பகல் முன்னிலையாகினர்.

இதன்போதே அவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.