கலையழகனின் மனைவிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பாணை (காணொளி)

499 0

kalaiyalakan-mrsகிளிநொச்சி விநாயகபுரத்தில் வசித்து வரும் வடபோர்முனையின் கட்டளைத் தளபதியாக இருந்து மரணமடைந்த லெப் கேணல் கலையழகனின் மனைவிக்கு, கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பானை விடுத்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வட போர்முனையின் கட்டளைத் தளபதிகளில் ஒருவராக இருந்து மரணமடைந்த கெங்காதரன் எனும் லெப் கேணல் கலையழகனின் மனைவி விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏழு வருடங்கள் இருந்ததாகவும், கலையழகன் பயன்படுத்திய கைத்துப்பாக்கியை தற்போதும் வைத்திருப்பதாகவும், புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளை பேணுவதாகவும், வெளிநாடுகளில் இருந்து அதிகளவான உதவியை பெற்றுக்கொள்வதாகவும் கூறி பல தடவைகள் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அவரது விநாயகபுரம் வீட்டுக்குச் சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பு இரண்டாம் மாடிக்கு வாக்குமூலம் ஒன்று அளிப்பதற்காக வருகை தருமாறு அழைப்பானை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் தன்னை பெரும் அச்சத்திற்குள் தள்ளியுள்ளது என்றும், தொடர்ந்தும் இவ்வாறு நடந்தால் தானும் தனது இரண்டு பிள்ளைகளும் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கலையழகனின் மனைவி தெரிவித்துள்ளார்.