பழங்குடி கிராமங்களின் காணிகளை சிலர் கொள்வனவு செய்து வசித்து வருவதன் காரணமாக, தங்களது வாழ்வியல் பாதிப்படைவதாக, பழங்குடியினத் தலைவர் ஊரிவரிகே வன்னியலத்தன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
இவ்வாறு காணி கொள்வனவு செய்யப்பட்டு, கட்டிடங்களை நிர்மாணிப்பதுடன், மதுபான விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் மனு ஒன்றை பதுளை மாவட்ட செயலாளரிடம் கையளித்துள்ளதாகவும் ஊரிவரிகே வன்னியலத்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எமது செய்திப் பிரிவு பதுளை மாவட்ட செயலாளர் காமினி மகிந்தபாலவிடம் தொடர்பு கொண்டு வினவியது.
அதற்கு பதில் வழங்கிய அவர் பழங்குடியினத் தலைவர் முன்வைத்து முறப்பாடு தொடர்பில் தற்சமயம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.