மட்டக்களப்பின் சில பகுதிகளில் நாளையதினம் மின்சார விநியோகத் தடை எற்படுத்தப்படவுள்ளது.
களுவாஞ்சிக்குடிப் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த பணிகள் காரணமாகவே இந்த மின்சார விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, களுவாஞ்சிக்குடி, களுதாவளை, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம் போன்ற பகுதிகளில் இந்த மின்சார விநியோகம் தடைப்படவுள்ளது.
நாளை முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த மின்சார விநியோக தடை அமுலில் இருக்கும் என கல்லடி மின்சார சபையின் பொறியிலாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.