நியூட்ரினோ திட்டத்தை தொடங்குவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கவில்லை என்று இந்திய அணுசக்தி கழக தலைவர் சேகர்பாசு கூறினார்.
இந்திய அணுசக்தி கழக தலைவர் சேகர்பாசு சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நடக்கிறது. மேலும் 4 யூனிட்டுகள் தொடங்குவதற்கான பணி நடைபெறுகிறது. இன்னும் 5 அல்லது 6 ஆண்டுக்குள் இந்த பணி முழுவதும் முடிவடையும்.
கூடங்குளத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு தேவைக்கு அதிகமாக மின்சாரம் கிடைக்கிறது. எனவே தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை ஏற்படாது.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நடைபெறும் பணிகள் மெதுவாக நடைபெற்றாலும் சரியான முறையில் நடக்கிறது.
தற்போது நியூட்ரினோ திட்டத்தை தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டு உள்ளது. அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அதில் முக்கியமாக சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.