16 பேரும் பொதுஜன பெரமுனவில் சேர்ந்தால் வரவேற்கின்றோம்- மஹிந்த

231 0

அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி தமது கட்சியுடன் இணைந்துகொள்வதற்கு முன்வருவார்களானால் அவர்களுக்கு  அங்கத்துவம் வழங்குவதற்கு தாம் பின்னிற்கப்போவதில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கூட இதுவரை அங்கத்துவம் பெறவில்லை. இந்நிலையில், அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வது தமது பாராளுமன்ற அங்கத்துவத்துக்கு பாதிப்பானது என 16 பேர் கொண்ட குழுவிலுள்ள முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்திருந்தார்.

தேர்தல் ஒன்று நெருங்கும் போது 16 பேரும் குழுவாக நின்று கூட்டணி சேருமா? அல்லது பொதுஜன முன்னணியில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் போட்டியிட அக்கட்சியில் இணைந்து கொள்ளுமா? என்பது தெளிவில்லாத ஒன்றாகவே காணப்படுகின்றது.

Leave a comment