தனது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்-சந்தியா எக்னலிகொட

444 0

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு பின்னர் தனது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக தனக்கும், தனது பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தவித தொடர்புகளையும் பிரகீத் எக்னலிகொட வைத்திருக்கவில்லை என்றும் சந்தியா எக்னலிகொட திட்டவட்டமாக தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட கேலிச்சித்திர உடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட சம்பந்தப்பட்ட வழக்கு ஹோமாகம நீதிமன்றில் இடம்பெற்றபோது அத்துமீறி பிரவேசித்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், ஊடகவியலாளரின் மனைவி சந்தியா எக்னலிகொடவை கடுமையாக எச்சரித்ததை அடுத்து தேரருக்கெதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 14ஆம் திகதி தீர்ப்பளித்த நீதிமன்றம், கலகொட அத்தே ஞானசார தேருக்கு 6 மாதகால சிறை தண்டனையை விதித்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை தொடர்ந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

Leave a comment