பிரான்ஸ் தலைநகர் பரிஸில், நேற்று (வியாழக்கிழமை) பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி, தொழிலாளர் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது, மோதல்கள் எதுவும் ஏற்படாது இருக்க வேண்டும் எனும் பொருட்டு, ஏறக்குறைய 2000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இருப்பினும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த ஏறக்குறைய 100 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கைது செய்யப்பட்ட 100 பேரும், தங்களது அடையாளங்களை மறைக்கும் வகையில் முகமூடிகள் மற்றும் தலைக் கவசங்கள் அணிந்திருந்ததாகவும், அதனாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கருத்து தெரிவித்த உட்துறை அமைச்சர் பர்னார்ட் கெசினோவ், “பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டம் மோதல்கள் எதுவும் இன்றி மேற்கொள்ளப்பட்டது” என தெரிவித்தார்.
பிரான்ஸின் குறித்த புதிய தொழிலாளர் சட்டத்திற்கு அமைய தொழில் தருனர் ஒருவர் தனது நிறுவனத்தின் பணியாளரை இலகுவாக பணிநீக்கம் செய்யமுடியுமென தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.