இந்திய கைப்பந்து கப்டனாக தமிழக மாணவி ஷாலினி தேர்வு செய்யப்பட்டுள்ளார்!

488 0

கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஷாலினி. இவரது தந்தை ஒரு விவசாயி. இவர் புனேவில் நடந்த ஆசிய அளவிலான மகளிர் கைப்பந்து தேர்வுப் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்தப் போட்டிகளில் விளையாடி மாணவிகளில் இருந்து 12 பேர் 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவி ஷாலினி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து ஆர்வத்துடன் கைப்பந்து விளையாடி வந்த ஷாலினி, இந்திய அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். ஷாலினி தவிர சென்னையை சேர்ந்த ஜோதி என்ற மாணவியும் 12 பேரில் ஒருவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். இவருக்கு தமிழக காவல்துறை அதிகாரி சைலேந்திர பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்

Leave a comment