கிளிநொச்சி – அம்பாள் குளம் பிரதேசத்தில் கடந்த 21 ஆம் திகதி (21-06-2018) சிறுத்தை புலி ஒன்று அப்பிரதேச மக்கள் சிலரால் அடித்துக் கொல்லப்பட்டதாக செய்திகள் ஊடகங்களில் பரப்பப்பட்டன.
இச் சிறுத்தை அம்பாள் குளப் பகுதியில் 10 வரையிலான பிரதேச வாசிகளை கடித்ததாகவும் வன விலங்கு திணைக்கள உத்தியோகஸ்தர்களின் துரித செயற்பாடுகள் இன்மையாலும் பொதுமக்கள் சிலரால் சிறுத்தை அடித்துக் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.
குடிமனைக்குள் புகுந்து மக்களை கடித்துக் குதறும் சிறுத்தையை கொன்றது சரியா? பிழையா? என வாதப்பிரதி வாதங்கள் எழுதுள்ள நிலையில் சிறுத்தை எவ்வாறு கிளிநொச்சிக்குள் வந்தது? இதன் பின்நோக்கிய புலனாய்வு என்ன ?
1) கிளிநொச்சியை அண்டிய காட்டுப் பகுதியில் சிறுத்தைகள் வாழ்வதற்கான சூழல் இல்லை. எனவே ,இராணுவத்தினர் இச் சிறுத்தையை வளர்த்துள்ளனர் என அறிய முடிகின்றது.
2 ) முகாமில் வளர்த்த அல்சேசன் நாய் தப்பியோடிவிட்டதென சிறுத்தை கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்களின் முன்னர் அம்பாள்குளம் பகுதியில் இராணுவத்தினர் தேடுதல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
3) அம்பாள்குளத்தில் சிறுத்தை அடையாளம் காணப்பட்ட ஆறு மணித்தியாலத்தில் அது பசு மற்றும் கன்றுகளின் அருகில் சாதாரணமாக படுத்திருந்திருக்கிறது. எனவே ,சிறுத்தைக்கு வேட்டையாட தெரியவில்லை. ஆகவே இது ஒரு வளப்புச்சிறுத்தை என்பது புலனாகின்றது.
4) சிறுத்தை மக்களை கொல்லும் அல்லது பாரிய காயத்தை ஏற்படுத்தும் ஆனால் குறித்த இந்த சிறுத்தை பூனையைப் போன்று விறாண்டி உள்ளது.
5) சிறுத்தை மிக வேகமாக ஓடக்கூடிய விலங்கு ஆனால் அம்பாள் குளத்தில் நவீன அயுதங்கள் அற்ற சில இளைஞர்களால் சிறுத்தையை எவ்வாறு கொல்ல முடிந்தது?
இவ்வாறான கேள்விக் கணைகள் எழுகின்றன…….!
அதே சமயம் சிறிலங்கா இராணுவ அரசியல் , புலனாய்வு நோக்கு நிலையிலிருந்து உருவாக்கப்பட்ட சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான கட்டளைத்தளபதியாக இருந்த கேணல் ரவிப்பிரியவின் பிரியாவிடையின் போது சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் வேலை செய்த மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இச் சம்பவம் அதிர்ச்சி அளித்த போதிலும் எதிரியால் திட்டமிட்டு பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு ஊடுருவி தமக்கு சாதகமாக மடை மாற்றும் செயற்பாட்டை காணக்கூடியதாக உள்ளது.
இதே வேளை தமிழீழ தேசிய விலங்கு சிறுத்தையை வேகமாக ஓட முடியாத வகையில் ஊசி மருந்து ஏற்றப்பட்டு மக்கள் பகுதிக்குள் திட்டமிட்டு விடப்பட்டு சிங்கள ஏகாதி பத்தியத்தின் சில கைகூலிகள் அப்பாவி இளைஞர்களை சிறுத்தையை வேட்டை ஆடும் நோக்கோடு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன் உள் நோக்கத்தை அறியாத இளைஞர்கள் சிறுத்தை வேட்டையில் ஈடுபட்டதுடன் கைக்கூலிகளின் திட்டமிட்ட செயலால் “செல்பி“யும் (புகைப்படம்) எடுத்துக் கொண்டதுடன் சமூக வலைத்தளங்களிலும் பரவ விட்டனர். இது உலக தமிழர் மனங்களின் வலியை ஏற்படுத்தியதுடனும் அவமானமாகவும் கருதப்பட்டது.
இன்றைய இளைஞர்களின் “செல்பி” மோகத்தை தமது தந்திரத்திற்கு பயன்படுத்திய கைக்கூலிகள். இன்று அந்த இஞைர்களை கைதியாக்கி விட்டுள்ளனர்.
2009 ஆம் ஆண்டுடன் வன்னியில் புலியின் பாய்ச்சலும் சிறுத்தையின் சீற்றமும் அமைதியானதால் அராஜகம் தலைவிரித்தாடுகின்றது.