நாட்டில் நிலவும் தென்மேல் பருவபெயர்ச்சிக் காரணமாக நாடளாவிய ரீதியில் 20 மாவட்டங்களில் 40 ஆயிரத்து 17 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்தை 53 ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்பட்டுள்ளதுடன் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வெள்ளம் மற்றும் மண்சரிவின் காரணமாக 105 வீடுகள் முழுமையாகவும் 4,708 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது. இதனால் 14 ஆயிரத்து 437 குடும்பங்களைச் சேர்ந்த 55 ஆயிரத்து 553 பேர் இடம்பெயர்ந்துள்ளதுடன் அவர்கள் 265 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை தொடர்வதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். அமலநாதன் தெரிவித்தார்.
மேலும் இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.