தன்னைச் சிறையில் போட்டதற்கான முழுப் பொறுப்பும் இந்த அரசாங்கத்துக்குரியது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் முன்னணி அமைச்சர்கள் இருவரும் அதற்கு மேல் உள்ள இன்னும் ஒருவரும் சேர்ந்து விரைவாக ஞானசாரவுக்கு ஜம்பர் அணிவிக்க வேண்டும் என பேசியதாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும் தேரர் கூறினார்.
தூதரகங்களின் தேவைக்கு ஏற்ப, அறிக்கைகளை தயாரித்து அரச சார்பற்ற அமைப்புக்கள் செய்த சூழ்ச்சியின் வெளிப்பாடே தனக்கு எதிரான தீர்ப்பு எனவும் தேரர் தெளிவுபடுத்தினார்.
கடந்த 15 வருட காலமாக தன்னை சிறைப்படுத்தவும், ஜம்பர் அணிவிக்கவும் இந்த நாட்டின் சக்திகள் பல செயற்பட்டு வருவதாகவும், இன்றும் அது நடைபெறுவதாகவும் தேரர் சுட்டிக்காட்டினார்.
இந்த நாட்டிலுள்ள வஹாப் வாத அடிப்படை வாதிகளுக்கும் பொது பல சேனாவுக்கு ஜம்பர் அணிவிக்க வேண்டும் என்ற தேவை காணப்பட்டதாகவும் ஞானசார தேரர் மேலும் குறிப்பிட்டார்.
ராஜகிரியவில் உள்ள பொதுபல சேனா தலைமையகத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.