UGC சார்ந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் கபீர்

274 0

பல்கலைகக்கழக மானிய ஆணைக்குழுவின் நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவை சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் பற்றிய குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் பதிலளித்துள்ளது.

இந்த நிதியங்களில் இருந்து 100 கோடி ரூபாவிற்கும் மேலதிகமான பணம் பிணைமுறி கொடுக்கல் வாங்கல்களில் பயன்படுத்தப்பட்டதாக சமீபத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை மனித உரிமைகள் கேந்திர நிலையம் குற்றம் சாட்டியிருந்தது.

இதேவேளை இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து பணம் பெறும் திட்டம் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகும் எனவும் இதற்காக விசேட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்த விடயத்தில் தமக்கு எதுவித தொடர்பும் கிடையாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை இது பற்றிய தீர்மானங்களை மேற்கொண்ட சமயம் தாம் அமைச்சராகவும் இருக்கவில்லை என அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment