லுணுகம்வெகர, தெவ்ரம்வெகர பகுதியில் போலி நாணயத் தாள்களை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லுணுகம்வெகர பொலிஸாரிற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 5000 ரூபாய் நாணயத்தாள்கள் மூன்று பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அம்பலங்கொட மற்றும் தனமல்வில ஆகிய பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை இன்று (26) திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளனர்.