இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள லஞ்ச ஊழல் வழக்குடன் தொடர்புடைய ஆவணங்களை நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் ரங்க திஸாநாயக்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளருக்கு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்குச் சொந்தமான ஒரு கோடியே 95 லட்சம் ரூபா பெறுமதியான ஜீப் வண்டியொன்றை சட்ட விரோதமான முறையில் பயன்படுத்தியதன் மூலம் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிராக லஞ்ச,ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பிலான சாட்சிகளை விசாரணை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் முன்னாள் செயலாளர் எம்.எஸ்.எம். மொஹமட் சாட்சி வழங்கியுள்ளார்.