முல்லை கனிய மணல் அகழ்வு ஆராய குழு நியமனம்

275 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் பகுதியில் கனியமணல் அகழ்வது தொடர்பில் அரசியல் தலைவர்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

இந்த கலந்துரையாடலில் வணிக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் சி சிவமோகன் சாள்ஸ் நிர்மலநாதன் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா மற்றும் மாகாண அமைச்சர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவருவது தொடர்பில் மாகாண அரசுடன் உரிய முறையில் எதுவும் கலந்துரையாடவில்லை என்ற பல்வேறு கருத்து வேறுபாடுகள் இடம்பெற்றது..

பின்னர் இந்த திட்டத்துக்கு குழு ஒன்றமைத்து அந்தக் குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாகாணமுதலமைச்சரால் 7 பேரும் வணிக வாணிப அமைச்சரால் 5 பேரும் மாவட்ட செயலாளரால் 3 பேரும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் மற்றும் குறித்த வட்டார உறுப்பினர் உள்ளடங்கலாக 17 பேர் கலந்துரையாடி அறிக்கை இட்ட பின்னரே இந்த திட்டம் தொடர்பாக கலந்துரையாடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a comment