கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த தெஹிவளை பொலிஸ் நிலையமும் மொரட்டுவை பல்கலைக்கழமும் இணைந்து விசேட செயற்றிட்டம் ஒன்றை அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ளது.
முறையான பொதுமக்கள் போக்குவரத்து திட்டம் ஒன்று விருத்தி செய்யப்படும் வரை, அமையவுள்ள ஒரு தற்காலிக நடைமுறையே இதுவாகும் என மொரட்டுவ பல்கலைக்கழத்தின் பேராசிரியர் அமல் குமாரகே தெரிவித்துள்ளார்.
இந்த செயற்றிட்டத்தில் “கூகுள் மெப்” தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு வாகன நெரிசலிலுள்ள வாகனங்களின் இலக்கத் தகடுகள் அடையாளம் காணப்படும் என்று பேராசிரியர் அமல் குமாரகே மேலும் தெரிவித்துள்ளார்