தற்போது வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுள்ள இந்திக கருணாஜீவ என்பவருடன் இணைந்து Hovael Construction என்ற நிறுவனம் சீ.எஸ்.என்.தொலைக்காட்சி நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் மஹிந்த மற்றும் நாமல் ராஜபக்ஸவுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்த ஜோயல் செல்வநாயகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த ஜோயல் செல்வநாயகம் தற்போதைய அரசின் பிரதானிகளுடனும் நெருக்கமானவர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இவரது சகோதரரான நோயல் செல்வநாயகமும் ராஜபக்ஸ குடும்பத்தின் நண்பர் என்பதுடன், இவர் ஒரு வரத்தகர் என்றும் சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
எனினும் ஜோயல் செல்நாயகத்தின்Hovael Construction நிறவனத்தின் பெயரை சீ.எஸ்.என். தொலைக்காட்சி விடயத்தில் வெளியிடாமல் இருப்பதற்கு அரசு தரப்பில் சிலர் கடும் பிரயத்தனங்களை செய்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.