தனது 15 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய 18 வயது அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
அக்மீமன-போத்தல பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர்களது தந்தை இவர்களை விட்டு சென்றுள்ள நிலையில் தாய் மறுமணம் முடித்துள்ளதாகவும், குறித்த தாயுடனேயே பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரது சகோதரரும் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த முறைபாட்டிற்கு அமைய மேற்கொண்ட விசாரணைகளின் போது தனது சகோதரனால் 8 மாதங்களுக்கு முன்னர் தான் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 18 வயதுடைய அவரது சகோதரர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டிருப்பதாக அக்மீமன பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைத்திய பரிசோனைகளுக்காக அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.