மாகாணசபைகளுக்கு டிசம்பரில் தேர்தல்-ராஜித

228 0

வடக்கு, கிழக்கு உள்பட 6 மாகாண சபைகளுக்கு விருப்பு வாக்குகள் முறைமையில் (விகிதாசார) வரும் டிசெம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனரட்ன தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தலை நடத்த முன்னர், எல்லை நிர்ணய அறிக்கை, விவாதிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்படவேண்டும். பழைய முறையிலேயே மாகாணசபைத் தேர்தலை நடத்த இணங்கியுள்ளதாக ஊடங்களில் வெளியான செய்திகள் தவறு.

நானோ அல்லது, ஜனாதிபதியோ, பழைய முறையில் தேர்தலை நடத்த இணங்கவில்லை.மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி, புதிய முறையில் தேர்தலை நடத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்.

பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதென்றால் கூட அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்” என்று அமைச்சர் பைசர் முஸ்தபா கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில்
அமைச்சர் ராஜித இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Leave a comment