பதவியை இராஜினாமா செய்வேன் – பொன்சேகா

311 0

3 மாத காலத்திற்குள் சிங்கராஜ வனத்தில் உள்ள காட்டு யானைகள் தொடர்பில் உரிய தீர்வை அரசு வழங்கவில்லை என்றால் தன்னுடைய அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக வனசீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

காட்டு யானைகள் தொடர்பில் நேற்று (19) ரம்புக ரஜவத்த விகாரையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிங்கராஜ வனத்தில் இறுதியாக உள்ள இரண்டு யானைகளையும் ஹெரவ்பத்தான பகுதியில் உள்ள சரணாலத்திற்கு மாற்றம் செய்வதற்காக நடவடிக்கைகள் கடந்த 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இருப்பினும் ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய குறித்த இரு யானைகளையும் இடமாற்றம் செய்வது கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டது.

இதேவேளை, வனசீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகா மற்றும் பிரதி அமைச்சர் பாலித தேவப்பெரும ஆகியோர் நேற்று ரம்புக ரஜவத்த விகாரையில் வைத்து காட்டு யானைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், சில சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பெரஹரவில் செல்லும் மற்றும் கொழும்பை சுற்றியுள்ள பகுதியில் உள்ள யானைகளை மட்டும் தான் கண்டுள்ளனர்.

அரசாங்கத்தினால் குறித்த இரு யானைகளுக்கும் தேவையான வசதிகளை வழங்குவதாக கூறி அதனை வழங்கவில்லை என்றால் தான் ஒருபோதும் அமைச்சு பதவியில் இருக்கப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a comment