சாரதியின் தவறால் லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டையிழந்து யாழ். மாவட்ட செயலகத்தின் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உத்தியோகத்தர்களின் 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 துவிச்சக்கர வண்டிகள் முற்றாகச் சேதமடைந்தன.
இந்தச் சம்பவம் நேற்று (19) செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.
யாழ். மாவட்ட செயலகத்துக்குலொறி ஒன்றில் பொருள்கள் (கிராம சேவையாளர்களுக்கான பைகள் உள்ளிட்டவை) ஏற்றிவரப்பட்டன.
உத்தியோகத்தர்களின் வாகனத்தரிப்பிடத்துக்கு அருகில் லொறியை நிறுத்த சாரதி திட்டமிட்டுள்ளார்.
வாகனத்தின் பிரேக்கை அமர்த்துவதற்கு பதிலாக அச்சிலேற்றரை சாரதி மாற்றி அழுத்தியதால் வாகனம் வேகக் கட்டுப்பாட்டையிழந்து உத்தியோகத்தர்களின் வாகனத் தரிபிடத்துக்குள் புகுந்தது.
இதனால் 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 துவிச்சக்கர வண்டிகள் முற்றாகச் சேதமடைந்தன.