பாராளுமன்றம் அமைந்துள்ள காணிக்கான நிரந்தர உறுதி இன்று சபாநாயகரிடம் கையளிப்பு

296 0

பாராளுமன்றம் அமைந்துள்ள காணிக்கான எல்லைகள் குறிப்பிடப்பட்ட நிரந்தர உறுதி இன்று பிற்பகல் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளது.

1982 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிக்குரிய உரிமைப் பத்திரத்தின் மூலம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கான இந்தக் காணி பெற்றுக்கொள்ளப்பட்டது.

பாராளுமன்ற கட்டிட தொகுதியும், சபாநாயகர் உத்தியோகபூர்வ இல்லமும் அமைந்துள்ள காணிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்ல கட்டிடத் தொகுதிக்குரிய காணிக்குமான நிரந்தர உறுதி வழங்கப்படும் என்று அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

Leave a comment