சிறையிலுள்ள மதகுருமார்களும் ஏனைய கைதிகளை போன்றவர்களே!

325 0

சிறையிலுள்ள மதகுருமாரிற்கு விசேட சலுகைகளை வழங்கவேண்டிய அவசியமில்லை அவர்களை ஏனைய கைதிகள் போன்றே நடத்தவேண்டும் என மனித உரிமைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை கட்டளை விதிகளின் அடிப்படையில் மகுருமார்களை நடத்தவேண்டும் என தெரிவித்துள்ள மனித உரிமைகளிற்கான நிலையம் மதகுருமாரிற்கோ அல்லது வேறு எந்த குழுவினருக்கும் சலுகைகளை வழங்கவேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளது.

இலங்கை சிறைகளில் 15 பௌத்தகுருமார் உட்பட 18 மதகுருமார் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் அனைவரும் சிறைச்சாலைகள் சட்டத்தின் கீழேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனவும் மனித உரிமைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பௌத்த மத குருமார்களை கைதுசெய்வதற்கு முன்னர் பௌத்தமகாநாயக்கர்களின் அனுமதியை பெறவேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அரசமைப்பில் இதற்கான ஏற்பாடு உள்ளது,பௌத்தமதகுருமார்களிற்கு எதிரான வழக்குகளை விசாரணை செய்வதற்கான தனி நீதிமன்றத்தை உருவாக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரை விசாரிப்பதற்கு காண்பித்த வேகத்தை ஏனைய வழக்குகள் விடயத்தில் நீதிமன்றம் காண்பிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment