யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள் மக்களுக்கு நீதிகோரியும், காணாமல் போனவர்களது நிலையை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தி வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
‘நிலைமாறு காலகட்ட நீதிப்பொறிமுறை’ ஆனது ஒரு அனைத்துலக ஏமாற்று நாடகம் என்று பகிரங்கப்படுத்தி வவுனியாவில் இன்று சனிக்கிழமை இந்தக் கவனவீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு ஆகியன இணைந்து இப்போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
இதற்கமைய இந்தப் போராட்டம் வவுனியா மத்திய பேரூந்து நிலையம் முன்பாக நடைபெறவுள்ளது. குறித்த கவனவீர்ப்பு போராட்டத்தில், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஆட்கடத்தல் மற்றும் தடுத்து வைத்தல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களும், இந்தக் குடும்பங்களின் நலன்களில் அக்கறையுடையவர்களும் கலந்துகொள்வர் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.