‘ஜெயாவின் அணுகுமுறை சரியில்லை’ – இளங்கோவன் குற்றச்சாட்டு

448 0

daily_news_7615886926652‘பக்கத்து மாநிலங்களுடன் ஜெயலலிதா அணுகுமுறை சரி இல்லாததே, காவிரி நீர் கிடைக்காததற்கும்; மோதலுக்கும் காரணம்,’ என, தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் குற்றம் சாட்டினார்.

கர்நாடகத்தில், தமிழர்கள் தாக்கப்படுவதும், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்படுவதும் கண்டிக்கத்தக்கது.

இதற்கான இழப்பீட்டை, மத்திய அரசு மற்றும் கர்நாடகா அரசிடம் இருந்து பெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க, ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்தனை சம்பவங்கள் நடந்தும், வழக்கம்போல் பிரதமருக்கும், சித்தராமையாவுக்கும் ஜெயலலிதா கடிதம் மட்டும் எழுதுகிறார்.

இவ்வளவு பிரச்னைக்கும் காரணம், பக்கத்து மாநிலங்களுடன் ஜெயலலிதாவுக்கு, நல்ல அணுகுமுறை இல்லாததே காரணம்.

கர்நாடகத்தில், 56 டி.எம்.சி., நீர் இருக்கும்போது, 15 டி.எம்.சி., நீரை தருவதில், எந்த சிக்கலும் இல்லை.

கர்நாடகத்தில் காங்., ஆட்சி செய்தாலும், அங்கு நடக்கும் வன்முறையை ஏற்க முடியாது.
காவிரி நீர் பிரச்னைக்காக விவசாய சங்கங்கள் அறிவிக்கும் போராட்டம், கடையடைப்பு போன்றவைகளுக்கு, காங்., ஆதரவு எப்போதும் உண்டு.

தி.மு.க.,வுடன் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும்; தேர்தல் அறிவிப்புக்குப் பின், பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும் எனவும் இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.