ஹங்வெல்ல, வெலிகன்ன பகுதியில் வெட்டுக்காயங்களுடன் தாய் மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கணவன் தன் மனைவியையும், மனைவியின் தாயையும் இவ்வாறு வெட்டிக்கொலை செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
68 வயதுடைய ரூபசிங்க ஆரச்சிகே மேரி ராணி மற்றும் 38 வயதுடைய செனரத் லியனகே லக்மினி ஶ்ரீயாகாந்தி ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களாவர்.
நேற்று (18) இரவு இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் எனவும், சாமர யசோத பண்டார எனும் நபரே இந்த கொலையை செய்திருக்க கூடும் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் 4 மாத குழந்தையை சடலத்திற்கு அருகில் இருந்து மீட்ட பொலிஸார் குழந்தையை வைத்திசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.