மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் புதிய எரிபொருள் வகை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று அமைச்சில் இடம்பெற்ற, நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொருளாதார ரீதியாக நிவாரனம் வழங்கும் முகமாக முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு குறித்த புதிய பெற்றோல் வகையை அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.