தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில், தடுப்பூசி போட்ட குழந்தை, மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சையைச் சேர்ந்த பிரபாகரன் – பரணி தம்பதிக்கு, மூன்று மாதங்களுக்கு முன், ஆண் குழந்தை பிறந்தது.
செப்., 10இல், குழந்தைக்கு, தஞ்சை அரசு மருத்துவ மனையில் தடுப்பூசி போட்டனர்.
மறுநாள், குழந்தைக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவு, குழந்தை இறந்தது.
‘தடுப்பூசி போட்டதால் தான், குழந்தை இறந்து விட்டது. காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்;. அதுவரை, உடலை வாங்க மாட்டோம்’ என, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறினர்.
குழந்தைக்கு சளி தொந்தரவு அதிகம் இருந்ததால் இறந்து விட்டதாக, மருத்துவர்கள் கூறியுள்ளனர்.