புதிதாக இரண்டாயிரம் பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.
பொது மக்களுக்கு சிறப்பான போக்குவரத்துச் சேவையை வழங்க, அரசாங்கத்தின் நிதியை பயன்படுத்தாது அதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதே நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.
பஸ்களுக்கு 500 என்ஜீன்களை பொருத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.