கேரளாவில் மாயமான இளைஞர்கள் – ஐ.எஸ் இயக்கத்தினர் பகுதியை சென்றடைந்ததாக என்.ஐ.ஏ தகவல்

366 0

201609140129100239_twentytwo-missing-keralites-reached-afghanistan-in-july-to_secvpfகேரளாவின் காசர்கோடு மற்றும் பாலக்காடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளம் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என 22 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமாகினர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள்.

மாயமானவர்களில் சிலர் தொழில்நுட்ப நிபுணர்களும் ஆவர்.

இவர்கள் சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் சென்று அங்கு ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தினர்.

மாயமான அனைவரும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்க பகுதிகளுக்கு சென்று சேர்ந்துவிட்டதாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பெங்களூரு, ஐதாராபாத், மும்பை ஆகிய விமான நிலையங்களில் இருந்து குவைத், மஸ்கட் , அபுதாபி ஆகிய இடங்கள் வழியாக ஆப்கானிஸ்தான் சென்று சேர்ந்துள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

இந்த தகவல்கள் கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் புறப்பட இருந்த யாஸ்மின் முகம்மது என்ற பெண்ணை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து விசாரித்ததில் தெரியவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.