பெங்களூருவில் வன்முறை எதிரொலி – 25 ஆயிரம் கோடி ரூபா இழப்பு

380 0

201609140428100870_software-online-businesses-closed-the-estimate-loss-of-rs_secvpfகர்நாடகத்தில் வன்முறை நீடித்து வருவதால், பெங்களூருவில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (சாப்ட்வேர்), ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.

இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்றும், தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்றும் அழைக்கப்படும் பெங்களூருவில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.
இவற்றில் நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகியவற்றின் பெங்களூரு கிளைகளில் மட்டும் மொத்தம் 70 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
மேற்கண்ட 3 நிறுவனங்களும் நேற்று விடுமுறை அறிவித்தன.

இருப்பினும், பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு தங்கள் ஊழியர்களைக் கேட்டுக்கொண்டன.

விப்ரோ நிறுவனம் நேற்றைய விடுமுறைக்கு பதிலாக, 17ஆம் திகதி சனிக்கிழமை பணி நாளாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.

இதுபோல், நாட்டின் முக்கிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான் இந்தியா ஆகியவையும் நேற்று விடுமுறை அறிவித்தன.
இதற்கிடையே, காவிரி பிரச்சினை தொடர்பான போராட்டங்கள் மற்றும் வன்முறை காரணமாக, தொழில்துறைக்கு 22 ஆயிரம் கோடி முதல் 25 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில் வர்த்தக கூட்டமைப்பான மதிப்பிட்டுள்ளது.