அரசாங்கத்துடன் உள்ளவர்கள் இன்னும் விலகாமல் இருப்பது துரதிஷ்டம்- செனவிரத்ன

257 0

அரசாங்கத்துடன் ஒட்டியிருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் இன்னும் அதிலிருந்து விலகாமல் இருப்பது துரதிஷ்டமான ஒன்று என முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஸ்ரீ ல.சு.க.யின் உப தலைவருமான டபிள்யு. டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

16 பேர் விலகியுள்ள நிலையில் ஏனையவர்களும் அரசாங்கத்திலிருந்து விலகுவார்கள் என்றே நாம் எதிர்பார்க்கின்றோம் எனவும் மாத்தளையில் நேற்று (15) இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்துடன் உள்ள ஸ்ரீ ல.சு.க.யின் 43 பேரும் நாட்டின் தலைவராகவுள்ள ஜனாதிபதியை ஐ.தே.க.யிடம் தனிமைப்படுத்தி விட்டு அரசாங்கத்திலிருந்து வெளியேற முடியாது என தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்துடன் உள்ள ஸ்ரீ ல.சு.க.யின் சிலர் தம்முடன் இணைந்து கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல சந்தர்ப்பங்களிலும் கூறிவருகின்றார். இதற்காக அவர்கள் தருணம் பார்த்திருப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படிப் போனாலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் வரையில் கட்சித் தாவல்கள் குறித்து எதனையும் கூற முடியாத ஒரு நிலைமையே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment