காவிரி நீர் பிரச்சினை பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த இரு தினங்களாக கர்நாடகாவின் காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையில், சில சமூகவிரோதிகள் பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி, இன உணர்வுகளை தூண்டி, வெறுப்பையும், பகைமையையும் ஏற்படுத்தி, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து வருகிறார்கள்.
இத்தகைய செயல்கள் சட்டப்படி கடுமையான தண்டனைக்குரிய குற்றமாதலால், இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது ஏற்கனவே சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் இத்தகைய பொய்யான தகவல்களை நம்பவேண்டாம் என்றும், மேலும் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.